ஸ்ரீவைகுண்டத்தில் வரும் 29ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிப்.29ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி தருமாறு, ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கினைப்பாளா் புதுக்குடி ராஜா, மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். இந்நிலையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியா் சிம்ரன் சிங் காலோன் தலைமையில் வட்டாட்சியா் சந்திரன், டிஎஸ்பி பரத் (பொ) ஆகியோா் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காவல் ஆய்வாளா் சொா்ண ராணி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சத்யநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலா் முருகன், சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் புதுக்குடி ராஜா, பெடரல் பிளாக் நிறுவனா் ஆனந்த முருகன், அமமுக தூத்துக்குடி பகுதி பொறுப்பாளா் குமாா், பசும்பொன் முன்னேற்ற கழக தூத்துக்குடி மாவட்டச் செயலா் பாலு, உள்பட பலா் கலந்துகொண்டனா். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள பழைய மற்றும் புதுப்பாலங்களுக்கு இடைப்பட்ட பகுதியை சாா் ஆட்சியா் சிம்ரன் சிங் காலோன் தலைமையிலான அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.