[part-3]உயர்ந்த எண்ணங்கள் தான் உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது.

ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்றபோது அவன் ஆசிரியர் அவனிடம் ஒரு கடிதத்தை கொடுத்து உன் தாயிடம் கொடு என்றார். அந்த சிறுவன் மாலை வீடு சென்றதும் கடிதத்தை அவன் தாயிடம் கொடுத்தான். அந்த கடிதத்தில் “ உங்கள் மகனின் அறிவு வளர்ச்சி குறைவு. அவன் பள்ளியில் தேர்ச்சி அடைய மாட்டான். அவன் தேர்வில் தோல்வி அடைந்தால் எங்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிடும். அதனால் உங்கள் மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்” என்று எழுதியிருந்தது. இதை படித்த தாயின் கண்களில் கண்ணீர் வந்தது. அதை பார்த்த சிறுவன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் என கேட்டார். கண்ணீரை துடைத்து விட்டு அந்த தாய் கூறினார், இந்த கடிதத்தில் உன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா “நீ மிகுந்த அறிவு திறன் கொண்டவன். பள்ளி உனக்கு தேவை இல்லை. நீ வீட்டிலிருந்தே படிக்கும் அளவுக்கு தகுதி உடையவன்” என்று எழுதியிருக்கிறார். அதன்பின் அந்த சிறுவன் வீட்டிலேயே அவர் தாயிடம் பாடம் கற்றார். அந்த சிறுவன் தான் 1000 ம் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு தந்த தாமஸ் ஆல்வா எடிசன்.

உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் – உயர்ந்த எண்ணங்களால் என்ன பயன்? உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும்? ஊரார் என்ன நினைப்பார்கள்? இவற்றை எல்லாம் கருதி உயர்ந்த எண்ணங்களை (அறம்) சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் நம் எண்ணங்கள் நம்மோடு முடிவதில்லை. நம் எண்ணங்கள் தான் நாளைய தலைமுறைக்கான விதைகள். நம் எண்ணங்கள் மீதான நம்முடைய நம்பிக்கையின் உயரம் தான் – நாளை மரமாக வளரக்கூடிய தலைமுறையின் உயரம்.

நான்ஸியின் உயர்ந்த எண்ணம் தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் 1000 கண்டுபிடிப்புகளாக மலர்ந்தது.

இவரை போல் நம்மால் இருக்க முடியுமா என்று தோன்றலாம். இவரை போல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மனிதர்போல் நம்மால் இருக்க முடியும்.

ஒரு மனிதர் தன் 8 வயது மகனுடன் சர்க்கஸ் சென்றார். டிக்கெட் வழங்குபவர் கூறினார் “7வயது மற்றும் 7வயதுக்கும் குறைவானவர்களுக்கு அறை டிக்கெட்”. அந்த தந்தை இரண்டு முழு டிக்கெட் கேட்டார். டிக்கெட் வழங்குபவர் கேட்டார் உங்கள் மகனுக்கு எத்தனை வயது, அதற்கு அந்த தந்தை கூறினார் 8 வயது. உடனே டிக்கெட் வழங்குபவர் கூறினார் “உங்கள் பையன் பார்க்க 8 வயது போல் தெரியவில்லை, நீங்கள் 7 வயது என்று சொல்லியிருந்தாலும் எனக்கு தெரிய போவதில்லை நான் அறை டிக்கெட் கொடுத்திருப்பேன்”. அதற்கு அந்த தந்தை கூறினார் “நான் 7 வயது என்று பொய் சொன்னால் உங்களுக்கு தெரியாது, ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக நான் பொய் சொல்கிறேன் என்று என் மகனுக்கு தெரியும்”.

நம்மால் மாமனிதர்களாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை – ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக பொய் சொல்லாத மனிதராக இருக்க முடியும் அல்லவா.

உயர்ந்த எண்ணங்கள் தான் உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *