விவசாயிகளுக்கு உழவர் அட்டை வழங்குதல்: தூத்துக்குடி

நபார்டு வங்கியானது, விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த தொழிலுக்கு எளிய முறையில் கடன் பெறுவதற்காக உழவர் அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி விவசாயிகளுக்கு தேவையான கடன் தொகை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அனுமதிக்கப்பட்டு, மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிகள் பெயரில் உள்ள கணக்கில் வரவு வைத்து கொடுக்கப்படுகிறது. இக்கணக்கிலிருந்து விவசாயிகள், தங்களுக்கு தேவைப்படும் தொகையினை உழவர் அட்டை (KISAN CARD)ஐ பயன்படுத்தி எந்த ஒரு வங்கி ATM மூலமாகவும் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

நமது மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இந்த ATM CARD வழங்கும் திட்டத்தை முதல் கட்டமாக 3000 விவசாயிகளுக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் அவர்களால் இன்று 12/06/2020 தொடங்கி வைக்கப்பட்டது.