பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கல்

கோவில்பட்டி நகர பாஜக சாா்பில் பயனாளிகளுக்கு பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கும் விழா தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமையில் நடைப்பெற்றது. கட்சியின் நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன், வணிகா் பிரிவு மாநிலத் தலைவா் ராஜகண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர துணைத் தலைவா்கள் போஸ், ராஜ்குமாா், உமாசெல்வி, மாவட்டச் செயலா்கள் மாரியப்பன், அமுதா கணேசன், கோமதி, நகரப் பொதுசெயலா் முனியராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.