இஸ்ரோ தலைவர் முனைவர் சிவனுக்கு மிக உயரிய சர்வதேச விருது, நாட்டிற்கு பெருமை !!

இஸ்ரோ தலைவராக நமது தமிழகத்தை சேர்ந்த முனைவர் சிவன் திறம்பட பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சர்வதேச விண்வெளியியல் அகாடமி 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த விண்வெளி விஞ்ஞானிக்கான வான் கார்மென் விருதை இவருக்கு வழங்க முடிவு செய்துள்ளது, வருகிற 2021 ஆண்டு மார்ச் மாதத்தில் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இதற்கான விழா நடைபெற உள்ளது.

இந்த விருதை மிகச்சிறந்த ஏரோஸ்பேஸ் பொறியாளரான தியோடர் வான் கார்மென் அவர்களுடைய பெயரில் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சர்வதேச விண்வெளியில் அகாடமி கடந்த 1982ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் இந்த விருதை சார்ல்ஸ் எலாய்ச்சி என்பவர் இவ்விருதை பெற்றார்.

முனைவர் சிவனுக்கு முன்னரே இரண்டு இந்தியர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். அவர்கள் முனைவர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் மற்றும் யு.ஆர். ராவ் ஆகியோர் ஆவர்

கிரேடிட்ஸ்: இந்திய இராணுவ செய்திகள்