இஸ்ரேல் ராணுவம்

ஹமாஸ் பயங்கரவாத முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த இயக்கம் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த இயக்க பயங்கரவாதிகளை அழிக்க இஸ்ரேல் ராணுவமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு ராணுவத்தினரை குறிவைத்து ஹமாஸ் இயக்க பயங்கரவாதிகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் இயக்க முகாம் மீது ஹெலிகாப்டர் மூலம் வான்வழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை.

-dailythanthi