தற்காலிகமாக மூடப்பட்ட தனியார் மருத்துவமனையை ஆய்வு : மருத்துவ குழு

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மேலும் அந்த பெண் ஊழியருடன் பணியாற்றி வந்த மற்றொரு பெண் ஊழியருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு, மருத்துவமனை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது. பின்பு கரோனாவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகளை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.  பின்னர் அந்த மருத்துவமனை முழுவதும் தொடர்ந்து ஒரு வாரமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தற்போது, அந்த தனியார் மருத்துவமனையை மீண்டும் திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் ராஜசேகர் தலைமையிலான குழுவினர் மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ள கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து வருகிற 20-ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வுக்கு பிறகு மருத்துவமனையை திறப்பதற்கு உரிய சான்றிதழை டாக்டர்கள் குழுவினர் வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மருத்துவமனை மீண்டும் செயல்பட தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது, சுகாதார பணிகள் இணை இயக்குனர் பொன்இசக்கி, மாநகர நல அலுவலர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.