மின்துறையின் புது ஆப் அறிமுகம் செய்தார் தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு புதிய செயலியை அறிமுகம் செய்தார். மேலும், ஆவின் நிறுவனத்தின் 5 புதிய பொருட்களையும் அறிமுகம் செய்தார்.

தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு என்று புதிய செயலியை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகம் செய்தார். www.tnpowerfinance.com மற்றும் TNPFCL என்ற பெயரில் செயலியை வெளியானது. இத்துடன் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திலுள்ள 8,000 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி என்ற அளவில் நிதியுதவி திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.

இத்துடன், ஆவின் நிலையங்களில் மோர், சாக்கோ, லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, ஆவின் டீ மேட் பால், சமன்படுத்தப்பட்ட பால் ஆகிய 5 புதிய பொருட்களையும் அறிமுகம் செய்தார்.

கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு தினமும் பல்வேறு கட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வரும் முதல்வர் இன்றும் மாநிலத்தின் மேம்பாட்டுக்காக இந்த புதிய செயலியை அறிமுக செய்து வைத்தார்.