தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் இன்றைய பேட்டி (21/05/2020)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மற்றும் கரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் 113 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 77 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் இருவர் மட்டுமே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் மற்ற அனைவரும் மகாராஷ்டிரா, சென்னை, செங்கல்பட்டு பகுதிகளிலிருந்து ஊர் திரும்பியவர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 15 இடங்களில் வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் முழு பரிசோதனை செய்யப்படுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இதுவரை 1000 பேர் வந்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 700 பேர் தனிமைப்படுத்த ஏதுவாக 9 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பவதற்கு இம்மாதம் மூன்று ரயில்கள் இயக்கப்பட உள்ளது, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச தொழிலாளர்கள் அனுப்பப்பட உள்ளனர். நாளை ஸ்டெர்லைட் நினைவு தினத்தையொட்டி 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 144 தடை உத்தரவு இருப்பதால் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு தான் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.