தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவத்துறையில் பணியாற்றிட நேர்முகத் தேர்வு – மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளில் தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றிட செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், பல் நோக்க மருத்துவமனை பணியாளர்கள் ஆகிய பதவிகளுக்கு நேர்முக தொகுப்பு தேர்வு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுபடுத்தும் வகையில் சுகாதார பணிகளில் தற்காலிகமாக ஈடுபடுத்திட தொகுப்பு ஊதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களை நியமிக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியுள்ள பணியாற்றிட விருப்பமுள்ளவர்கள் அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதார் கார்டு, குடும்ப அட்டை பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 2 உள்ளிட்ட ஆவணங்களின் செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப பணியாளர் பதவிகளுக்கு 13.7.2020 (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கும், பல் நோக்க மருத்துவமனை பணியாளர் பதவிக்கு 14.7.2020 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கும் உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) கோரம்பள்ளம் தூத்துக்குடி அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு நேரில் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்