எம்பவர் இந்தியா சார்பில் சர்வதேச இணைய வழி கருத்தரங்கு நடத்தப்பட்டது

தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு மற்றும் அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் கோவிட் 19 தாக்குதலுக்கு ஆளாகும் முதியவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த சர்வதேச இணைய வழிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ.சங்கர் கூறியதாவது :

கோவிட் 19 தாக்குதலுக்கு ஆளாகும் முதியவர்களை வீடுகளில் வைத்து பாதுகாப்பதற்கு பயந்து முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையான சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் முதியோர் இல்லங்கள் கோவிட் 19 ஐ காரணம் காட்டி முதியவர்களை ஆதரவற்ற இல்லத்தில் சேர்ப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முதியவர்களை பெரிதும் பாதிக்கின்றது. உலக அளவில் 60 வயதை கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 1995 ம் ஆண்டு 542 மில்லியனாக இருந்தது. இது 2020 – 2025 இல் 1.2 பில்லியன் ஆக அதாவது இரு மடங்காக உயரப் போகிறது என எம்பவர் சங்கர் கூறினார். இதில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எமிலி பெர்ட்டிகோ, சர்க்கரை நோய் மருத்துவர் அருள் பிரகாஷ், இதய நோய் மருத்துவர் நீலாம்புஜன், சென்னை ஹெல்ப் ஏஜ் இந்தியா தலைமை நிர்வாகி சிவக்குமார் ஆகியோர் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் இணைய வழியாக பகிர்ந்து கொண்டனர். உலகெங்களிலும் உள்ள பார்வையாளர்கள் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை அன்னம்மாள்; மகளிர்; கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா, எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை, இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சுதா குமாரி ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.