மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரானா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கரோனா வார்டில் உள்ள அனைத்து நோயாளிகளும் சிகிச்சை முடித்து சென்று இருப்பதால், அந்த வார்டு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக கரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வருவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்ட எல்லைகளில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.