ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடம் கட்டும் பணிக்கு ஆட்சியர் அடிக்கல் – தூத்துக்குடி

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ரூ. 48 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அரசு செவிலியர் பள்ளியில் தூத்துக்குடி ஆட்சியர் சந்திப்நந்தூரி இன்று அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி  வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்ல்லுாரி முதல்வர் (பொ) டாக்டர் பாவலன், உறைவிட மருத்துவர் டாக்டர் ஜெயபாண்டியன், சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி, சேவை மைய நிர்வாக அதிகாரி ஷெலின், பொதுப்பணித்துறை உதவி செயற்பாெறியாளர் வெள்ளச்சாமி ராஜ், உதவி பாெறியாளர் அன்புராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.