கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதன் மூலம் மக்கள் கூலித் தொழிலுக்கு செல்ல முடியாமலும், வருமானம் இல்லாமலும் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் திருமதி. டி. பிரேமா ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நிலைய காவலர்கள், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் கோமஸ்புரம், சுனாமி காலனி, நேரு சுனாமி காலனி, தாய்நகர் சுனாமி காலனி, ராமதாஸ் நகர், சிலோன் காலனி, கீழ அழகபுரி, கணபதி நகர், கொத்தனர் காலனி, மருத்துவ நகர், கிழக்கு காமராஜர் நகர் பகுதி ஏழை எளிய மக்கள்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், வெங்காயம், சமையல் எண்ணெய், பொட்டுகடலை, ரொட்டி, பிஸ்கெட் மற்றும் சில பகுதிகளுக்கு உணவுகளும் வழங்கினார்கள். தாளமுத்துநகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் திருமதி. டி. பிரேமா ஸ்டாலின் அவர்களின் செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.