கோவில்பட்டியில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனுக்கு மிரட்டல் விடுத்து அவமதித்த காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் – கோவில்பட்டியில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம் தந்தை,மகன் உயிரிழப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு ஜாமீன் வழங்கமால், சிறையில் வைத்தே வழக்கினை நடத்தி தண்டனை வழங்க வேண்டும், சாத்தான்குளம் தந்தை,மகன் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்திய கோவில்பட்டி ஜெ.எம்.1 நீதிமன்ற நீதிபதி பாரதிதாசனுக்கு மிரட்டல் விடுத்து அவமதித்த காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு செய்யப்பட்டதை கண்டித்தும்,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வீரப்பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ட கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி நகர செயலாளர் அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.,இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெறமால் ஊரடங்கு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.