புதுமையான தியேட்டர் – சென்னை அபிராமி திரையரங்க வளாக உரிமையாளர் அபிராமி ராமநாதன்

புதுமையான தியேட்டர் ஒன்றை சென்னையில் கொண்டு வரப்போவதாக சென்னை அபிராமி திரையரங்க வளாக உரிமையாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். இதன்படி படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்தால் வீட்டுக்கே பிக்கப்புக்கு கார், படம் முடிந்தவுடன் வீட்டில் டிராப், இடைவேளையின்போது ஸ்நாக்ஸ்கள் அன்லிமிடெட். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம், போன்ற திட்டங்களை அறிமுகபடுத்தவுள்ளார். தியேட்டரின் கொள்ளளவு 200 சீட்டுக்கள் ஆனால் 60 சீட்டுக்கள் மட்டுமே போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு 8 சீட்டுக்கும் ஒரு வெயிட்டர் இருப்பார், தேவையானதை மெனுவில் ஆர்டர் செய்தால் அடுத்த சிலநிமிடங்களில் டெலிவரி செய்யப்படும். அதேபோல் பிறந்த நாள் திருமண பார்ட்டி என்றால் 60 சீட்டுக்களையும் புக் செய்தால், பொஃபே உணவு வழங்கப்படும். அந்த நேரத்தில் தியேட்டரில் நீங்கள்விரும்பும் எந்த படமாக இருந்தாலும் திரையிடப்படும். இப்படி ஒரு தியேட்டர் சென்னையில் கட்ட தொடங்கியுள்ளனர். இந்த தியேட்டர் திறக்கப்பட்டால் உலகிலேயே இதுதான் முதல்முறை என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.