ஊரடங்கால் பாதித்த தொழில் – சோடா மற்றும் கலர் உற்பத்தி

தூத்துக்குடி மாவட்டம் சோடா, கலர் உற்பத்தியாளர் சங்கத்தின் ஆலோசகராக தமிழ் நண்பன் உள்ளார். இவர் நமது Timestampnews செய்தியாளரிடம் கூறும் போது, தூத்துக்குடியில் மாவட்டம் முழுவதும் கிட்டத்தட்ட 150 தொழிலாளர்கள் சோடா, கலர் உற்பத்தியில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் அவர்களின் வாழ்வாதாரமே அடங்கியுள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு மத்திய அரசானது ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது, இதனால் அரசு அறிவிப்பின் படி தூத்துக்குடி மாவட்டம் சோடா, கலர் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் எந்தவொரு உற்பத்தியும், விற்பனையும் செய்யப்படவில்லை. தொழில்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எங்களுக்கு எந்த வருமானமும் இல்லை. மேலும் அவர் அரசுக்கு கொடுத்த கோரிக்கைகள் கீழ் வருமாறு,

தமிழக அரசுக்கு கோரிக்கை :

இந்த கொரோனா நோயினால் எங்கள் தொழில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசாங்கம் எங்களுக்கு எந்த உதவியும் செய்தது இல்லை, அரசாங்கமிடம் இருந்து எந்த உதவியும் இதுவரை நாங்கள் பெற்றது இல்லை. ஊரடங்கால் தொழிலும் இல்லை, வருமானமும் இல்லை இப்போது உண்பதற்கு உணவும் இல்லை இதைவிட பெரிய பிரச்சனை என்னவென்றால் தொழில் வளர்ச்சிக்கு வாங்கப்பட்ட வங்கி கடன் உள்ளது அரசாங்கம் அதனை தள்ளுபடி பண்ணுமாறு கேட்டுகொள்கிறோம். மானிய விலையில் சீனி வழங்க மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்து கொள்வதற்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்:

நாம் சிறுவயதில் இருக்கும் போது கண்ணாடி பாட்டில்களில் சோடா, கலர் குடித்திருப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்ட குளிர்பானத்தை தான் அருந்துகிறோம். குடித்து விட்டு கீழே போடும் பிளாஸ்டிக் பாட்டிலின் விலை மட்டும் 4 முதல் 5 ரூபாய் ஆகும். பிளாஸ்டிக் பாட்டிலில் தயாரிப்பில் உருவான குளிர்பானத்தை குடிப்பதன் மூலம் நோயால் பாதிக்கப்படுகிறோம். குளிர்பானத்தில் சேர்க்கப்பட கூடிய சிட்ரிக் ஆசிட், எஸெண்ட்ஸ் இதெல்லாம் தேவையான அளவு சேர்த்து தான் நாங்கள் மக்களுக்கு தயாரிக்கின்றோம். சுவைக்காக சில பன்னாட்டு நிறுவனங்கள் தேவையற்ற அளவு எஸெண்ட்ஸ் சேர்த்து நம்மிடம் விற்கிறார்கள். நாமும் சுவைக்காக அதை பருகுகின்றோம். அதில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்யானது ரோட்டிற்கு பயன்படுத்தக் கூடிய தாரின் முதல் தரத்தில் இருக்க கூடியது, பெட்ரோலிய பொருள்களில் உள்ள கழிவுகளில் இருந்து வர கூடியது. அந்த பெட்ரோலிய கழிவுகளில் இருந்து எடுக்க கூடிய தாரின் முந்தைய கழிவு தான் பிளாஸ்டிக். சிட்ரிக் ஆசிட்-யை பாட்டில்களில் அடைப்பதனாலே மிகப் பெரிய நோய்களான புற்றுநோய் வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் கூட நமக்கு அறிவுத்திட்டு இருக்கிறார்கள். பொதுமக்களாகிய நீங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை தவிருங்கள்! நமது பாரம்பரியமிக்க கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்துங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் கொடுத்துள்ளார்.