இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் – தூத்துக்குடி

தூத்துக்குடி, சேர்வைகாரன் மடத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான ரத்ன பாண்டி – தேன்மொழி தம்பதியின் மகன் அன்பு ராஜ் நெல்லையில் உள்ள நர்சிங் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார். திருநங்கை என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் ஒதுக்கி வைத்தாலும் அவரது தாய் தேன்மொழி தனது பிள்ளைக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அவரின் முயற்சி மற்றும் உழைப்பால் தமிழக அரசு அவரது சொந்த ஊரிலேயே அவருக்கு செவிலியர் பணி வழங்கி கௌரவித்துள்ளது.