இந்திய அணியின் கபடி வீரர் – M. கனகராஜ்

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகரில் வசிக்கும் M. முத்துச்சாமி, M. முத்துமாடத்தி, இவர்களின் இரண்டாவது பையன் M. கனகராஜ். இவர் இந்திய அணி கபடி வீரர் ஆவார்.
சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தூத்துக்குடி திரும்பிய நமது கபடி வீரர் கனகராஜ் அவர்களுக்கு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளித்தனர்.
நேபாளம் நாட்டில் பொகரா நகர் மைதானத்தில் இளைஞர் கிராமப்புற விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், சர்வதேச அளவிலான தடகள மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றன.

இதில் இந்தியா, பூடான், ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் சீனியர் பிரிவு கபடியில் இந்திய அணியினர் தங்கப்பதக்கம் பெற்றனர்.

இப்போட்டியில் பங்கேற்ற 12 வீரர்களில் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகரைச் சேர்ந்த M. கனகராஜ், இவர் ரவிக்குமார் கிளப்பில் உள்ள சிறந்த வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்கும், தமிழகத்திற்கும் மட்டுமல்லாது பிறந்த ஊருக்கே பெருமை சேர்த்து உள்ளார்.

நம்ம ஊரு கபடி வீரர்:

இவர் பெயர் கனகராஜ், இவர் ஒரு இந்திய கபடி வீரர் ஆவார். இவரது தந்தை முத்துச்சாமி, இவர் ஒரு டிரைவர் ஆக வேலைப் பார்த்து வருகிறார், இவரின் தாயார் முத்துமாடத்தி இல்லத்தரசி ஆவார். மூத்த அண்ணன் வைரமுத்து இவரும் ரவிக்குமார் கிளப்பின் சிறந்த கபடி வீரர் ஆவார் மற்றும் இவருடைய தம்பி பள்ளியில் படித்து வருகிறார்.

கனகராஜ் அவர்கள் பத்தாம் வகுப்பு வரை திரு.இருதய மெட்ரிகுலேசன் பள்ளியிலும், பன்னிரெண்டாம் வகுப்பை எஸ்.எ.வி உயர் நிலைப்பள்ளியிலும் மேலும் தனது கல்லூரி படிப்பை TMM கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்துள்ளார்.

இவர் பள்ளி பருவத்தில் கபடி விளையாட்டு மீது கொண்ட ஆர்வத்தினை அறிந்து கொண்ட இவரது அண்ணன் வைரமுத்து, தன்னுடைய தம்பி கனகராஜ் எப்படியாவது கபடி போட்டியில் சிறந்த வீரர்-ஆக மட்டுமல்லாமல் இந்திய கபடி அணியில் தேர்வாகி இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இவருக்கு உறுதுணையாக இருந்தார்.

தினமும் காலை, மாலை என இவருடைய கடுமையான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்கு இவரது அண்ணன் வைரமுத்து மற்றும் ரவிக்குமார் கிளப் வீரர்களும் ஒரு வித காரணமாக இருந்து உள்ளார்கள்.

தருவை மைதானம், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடக்கும் கபடி போட்டிகளில் தவறாமல் கலந்து கொண்டு வெற்றி பெற்று, சிறந்த ஆட்டக்காரர் என இவர் பல விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்று உள்ளார்.

கனகராஜ் அவர்களின் நீண்ட நாள் கனவாக ஆசிய போட்டி மற்றும் கபடி உலக கோப்பையில் இந்தியா-க்கு கோப்பை வெல்வதே நோக்கம் என்றார்.

தனது குடும்ப வறுமை நிலையை மனதில் கொண்டு தனது முழு திறமையை வெளிப்படுத்தி நம் நாட்டுக்கு பெருமை சேர்த்த நமது கபடி வீரரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நமது அரசாங்கம் உதவும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.