‘ஆபரேசன் சமுத்திர சேது திட்டம்’ மூலம் மாலத்தீவிலிருந்து 198 இந்தியர்களை அழைத்துக் கொண்டு வந்த இந்திய கடற்படை கப்பல்

மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்களை அழைத்து வந்த இந்திய கடற்படை கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது கப்பலில் வந்தவர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னர் தனி பேருந்துகளில் அவர்களின் சொந்த மாவட்டத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அதே போன்று சுற்றுலாவுக்கும் சென்று வருகின்றனர். அவ்வாறு சுற்றுலா சென்றவர்கள், பணியாற்றும் தொழிலாளர்கள், ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, மத்திய அரசு வந்தே பாரத் இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன்மூலம் பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்காக அந்த நாடுகளுக்கு விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஆபரேசன் சமுத்திர சேது திட்டத்தின்கீழ் இந்திய கடற்படை கப்பல் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாலத்திவில் இருந்து சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 195 பேர், புதுச்சேரியை சேர்ந்த 3பேர் என மொத்தம் 198 இந்தியர்களை இந்திய கடற்படை கப்பல் ‘ஐஎன்எஸ் ஐராவத்’ ல் தூத்துக்குடி துறைமுகத்திற்க்கு அழைத்து வந்தனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் குடியுரிமை, சுங்க சோதனைகள் பணிகள்
ஆய்வு முடிந்த பிறகு அவர்கள் 8 சிறப்பு அரசு பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
இப்பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்

ஆபரேசன் சமுத்திர சேது திட்டம் மூலம் மூன்றாவது முறையாக 198 பயணிகள் மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி அழைத்து துறைமுகம் வந்தனர்.இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு வழங்கி சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்க் கொள்ள பட்டுள்ளது.மேலும் வரும்
ஜூன் 28 ஆம் தேதி ஈரானில் இருந்து 700 இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். இதில் மீனவர்கள் அதிகமாக வர உள்ளனர் என்றார்.