மாலத்தீவில் இருந்து 700 பயணிகளுடன் இன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த இந்திய கடற்படை கப்பல்

மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களுடன் ஐ.என்.எஸ் ஜலஸ்வா கப்பல் இன்று தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச போக்குவரத்து தடைசெய்யபட்டுள்ளது. இதன் காரணமாக கல்வி, வேலைவாய்ப்பு , சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக சமுத்திரசேது என்ற திட்டத்தின் மூலம் இந்திய கடற்கடைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் கடந்த 2 ம் தேதி இலங்கையில் இருந்து 713 பேர் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதை தொடர்ந்து இன்று மீண்டும் மாலத்தீவில் உள்ள மாலி துறைமுகத்திலிருந்துலிருந்து 655 ஆண்கள் 45 பெண்கள் என 700 இந்தியர்களை அழைத்துக்கொண்டு இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஜலஸ்வா கப்பலானது
இன்று காலை தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.

இதில் வந்தவர்களில் 508 தமிழகத்தை சேர்ந்தவர்கள் மற்றவர்கள் அனைவரும் கேரளா,ஆந்திரா,கர்நாடக,பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் துறைமுகத்திற்குள்ளேயே வைத்து மருத்துவ குழுவினரால் மருத்துவ பரிசோதனை செய்யபட்டு, சுங்கத்துறை சோதனைக்கு பின்னர் அவர்களுக்கு தேவையான உணவு,தண்ணீர் ஆகியவை வழங்கபட்டு 25 சிறப்பு பேருந்துகளில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு ,
அனுப்பி வைக்கபடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தமிழக அரசின் சார்பில் சிறப்பாக செய்யபட்டுள்ளது.