போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டத்தில் ஒரு பகுதியாக மாநில அரசு பணி ஓய்வு வயதை 58லிருந்து 59ஆக உயர்த்தியதை கண்டித்து ms.முத்து மாவட்ட செயலாளர் தலைமையில் சமூக இடைவெளியுடன் போராட்டம் காலை 10.30 சிபிஎம் அலுவலகம் அருகில் நடைபெற்றது ஆசாத் மாவட்டக்குழு காஸ்ட்ரோ மாநகர தலைவர்
ராம்குமார் ஜேம்ஸ் ராஜ்குமார் மாநகரக்குழு கார்த்தி விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்

கோவில்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வயிற்றில் ஈரத்துணி கட்டி போராட்டம்

கோவில்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வயிற்றில் ஈரத்துணி கட்டி போராட்டம் நடைபெற்றது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசின் இந்த முடிவால் அடுத்த ஒரு வருடத்திற்கு அரசு துறைகளில் எந்தவொரு புதிய வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட வாய்ப்பில்லாமல் போகிறது. மேலும் இளைஞர்களின் அரசு வேலைக்கான வாய்ப்பும் பறிபோகிறது. ஏற்கனவே தமிழகத்தி்ல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியை நெருங்குகிறது. இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்பால் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

எனவே தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் வயிற்றில் ஈரத்துணி கட்டும் போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டியில் மாதாங்கோவில் ரோடு பகுதியில் அலுவலகம் முன்பு நடைபெற்றது.