இந்திய கடலோர காவல் படை இந்திய பாதுகாப்புத் துறையின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருவது கடலோரக் காவல் படை ஆகும். தற்போது, இந்த கடலோர காவல் படையில் காலியாக உள்ள யாந்த்ரிக் (Yantrik) பதவிக்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் என மூன்று பிரிவுகளில் மொத்தம் 37 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் மார்ச் 16ம் தேதி முதல் 22ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
Indian Coast Guard Recruitment 2020:
கல்வித் தகுதி : எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன் (ரேடியோ / பவர்) இன்ஜினியரிங் உள்ளிட்டு 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு டிப்ளமோ மதிப்பெண் தகுதியில் 5 சதவிகிதம் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : யாந்த்ரிக் பதவிக்கு லெவல் 5ன் படி அடிப்படை ஊதியம் ரூ..29,200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊதியம் தவிர்த்து, 6,200 ரூபாய் யாந்த்ரிக் தொகுப்பூதியம், இதர படிகள் ஆகியவை வழங்கப்படும். சலுகைகள், இதர படிகள் அனைத்தும் சேர்த்து மொத்தம் சுமார் ரூ.40 ஆயிரம் வரையில் வழங்கப்படும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையங்கள் : நாடு முழுவதும் மொத்தம் 4 நகரங்களில் இத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
எழுத்துத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் ஜூலை மாதம் ஆன்லைனில் வெளியிடப்படும்.
Indian Coast Guard Recruitment முக்கிய நாட்கள்:
- அறிவிப்பு வெளியான நாள் : 23 பிப்ரவரி 2020
- விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 16 மார்ச் 2020
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள் : 22 மார்ச் 2020
- தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியாகும் நாள் : 9 ஏப்ரல் 2020
- நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் : 16 ஏப்ரல் 2020
- பயிற்சி பணி தொடங்கும் நாள் : ஆகஸ்ட் 2020
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காண https://joinindiancoastguard.gov.in/PDF/Advertisement/YANTRIK_220_ADVT.pdf எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.