இந்திய ராணுவ கல்லூரி, தகுதித் தேர்வு – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி, டெராடூன் -2021 சேர்க்கை தகுதித் தேர்வுக்கு 31.03.2020 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்து உள்ளளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இராகூஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி, டெராடூன் -2021 சேர்க்கை தகுதித் தேர்வுக்கு 02-01-2008 க்கு பின்னதாகவும், 01-07-2009 க்கு முன்னதாகவும் பிறந்த 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது பயிலும் சிறார்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி தேர்வு 2020 ஜூன் 1;2 தேதிகளில் நடைபெறும். விண்ணப்பத்தினை The Commandant, RIMC, Garhi Cantt, Dehradun – 248003, Uttarakhand State என்ற முகவரியில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (இரட்டைபிரதி) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 31.03.2020 மாலை 5.45 மணிக்கு கிடைக்கப் பெற வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.rimc.org என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனர் முன்னாள் படைவீரர் நலன் தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்து உள்ளளார்.