கீதா கோபிநாத்

‛அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார சரிவை சந்திக்கும்’

டாவோஸ்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்து வரும் இரு ஆண்டுகளில் சரிவை சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்தார்.

சுவிஸ் நாட்டின் டாவோஸில் நடந்த உலக பொருளாதார ஆய்வு தொடர்பாக நடந்த கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது, ‛ இந்தியா அடுத்து வரும் இரு ஆண்டுகளில் வங்கி சாரா நிதித்திறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியாலும் மற்றும் குறைவான கிராமப்புற வருவாய் காரணமாகவும் பொருளாதார சரிவை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சரிவானது சந்தை பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 2019ம் ஆண்டில் 4.8 சதவீதமாகவும், 2020ம் ஆண்டில் 5.8 சதவீதமாகவும், 2021ல் அது 6.5 சதவீதமாகவும் இருக்கும் வகையில் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா மற்றும் அமெரிக்காவினிடையே ஏற்பட்டுள்ள முதற்கட்ட ஒப்பந்தம் காரணமாக உலக அளவில் பொருளாதார சரிவுக்கு அதிகம் வாய்ப்பில்லை. உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2019 ம் ஆண்டு 2.9 சதவீதமாகவும், 2020ல் 3.3 சதவீதமாகவும். 2021ல் 3.4 ஆகவும் இருக்கும் . இந்நிலையில் புத்தாண்டின் தொடக்கத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் புவிசார் பிரச்னைகள் , தட்பவெப்பநிலை மாறுதல் நிலவி வருகிறது’ இவ்வாறு கீதா கோபிநாத் தெரிவித்தார்