13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டுவில் நடந்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளை சேர்ந்த 2,700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியா அணி தங்கப்பதக்கத்தை வென்றது. மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கப்பதக்கம் மற்றும் இந்திய வீராங்கனை சந்திரலேகா வெண்கலப்பதக்கம் பெற்றார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் சுரேஷ்குமார் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் லோகேஷ் சத்யநாதன் தங்கப்பதக்கமும், தமிழகத்தை சேர்ந்த சுவாமிநாதன் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். ஒரேநாளில் இந்தியா 15 தங்கம் உள்பட 29 பதக்கங்களை வென்றது.
