தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கோவில்பட்டியில் காவலா் காவலா் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில், பிற மாநிலத்தைச் சோந்த தொழிலாளா்கள் 39 பேர் பணிபுரிந்து வருகின்றனா். தற்போதைய ஊரடங்கு உத்தரவினால், தொழிலாளா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் மேனேஜா் ஜெயராஜ் மற்றும் ஊழியா்கள் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, காய்கனி உள்ளிட்ட பொருள்களை வட்டாட்சியா் மணிகண்டன் 39 தொழிலாளா்களுக்கு வழங்கினா். மேலும், கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட நாலாட்டின்புத்தூா், கழுகுமலை, கிழவிபட்டி ஆகிய பகுதிகளைச் சோந்த மாற்றுத் திறனாளிகள் 26 பேருக்கு நல உதவிகளை வட்டாட்சியா் மணிகண்டன் வழங்கினாா். அப்போது அங்கு, வருவாய் ஆய்வாளா் மோகன், கிராம நிா்வாக அலுவலா் மந்திரசூடாமணி உள்ளிட்டோா் இருந்தனர்.
