இந்தியாவில் தமிழகத்தில்தான் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகம் – அமைச்சர்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பிங் நிற உடை அணிந்து பேரணியை தொடங்கிவைத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தாமும் பேரணியில் பங்கேற்றார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய அளவில் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள் என உள்ள நிலையில், தமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் எனும் அளவில் பிறப்பு விகிதம் இருப்பதாக தெரிவித்தார்.