india

ஆஸியை பழி தீர்த்த இந்தியா; 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது கிரிக்கெட் போட்டி சௌராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும்போது டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே எல் ராகுல் 80 ரன்களும் ஷிகர் தவான் 96 ரன்கள் கேப்டன் விராட் கோலி 78 ரன்களும் குவித்தனர்.

இதனைத்தொடர்ந்து 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஐம்பதாவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட்டிங்கில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 98 ரன்களும் mariner’s 46 ரன்களும் ஆரோன் பின்ச் 33 ரன்களும் குவித்தனர். பந்துவீச்சில் இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 3 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா மற்றும் நவதீப் சைனி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர்.

இதன் மூலம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை தற்போது சம நிலை வகிக்கிறது. இதில் சிறந்த கிரிக்கெட் வீரராக மிடில் ஆர்டரில் கலக்கிய இந்திய வீரர் கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

-seithikkural