u19

யூ19 உலக கோப்பை போட்டியில் ஜப்பானை வீழ்த்திய இந்தியா!!

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியாக ஜப்பான் அணியுடன் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ஜப்பான் அணி, 22.5 ஓவர்களில் 41 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 4.5 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி தனது இலக்கான 42 ரன்களை பெற்று வெற்றி பெற்றது. மேலும் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் ரவிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.