சுதந்திரம்

சுதந்திரம், என்பது மனதில் ஆரம்பமாகின்றது, கயிறுகளை வெட்டுவதால் அல்ல.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பெரும்பாலும், சூழ்நிலையாலோ அல்லது மக்களாலோ கட்டப்பட்டிருப்பதை போன்று உணர்கின்றோம். இது நம்மை அசௌகரியமாக உணரச் செய்வதோடு, நாம் இவற்றிலிருந்து விடுபடுவதற்கு முயற்சி செய்கின்றோம். ஆனால், விரைவில் இவ்வாறு செய்வது சுலபமாக இல்லாததை காண்பதோடு – உண்மையில் நாம் முறிஅடிக்க முயற்சி செய்கின்ற சங்கிலிகள், நம்முடைய மனதின் தயாரிப்பாகும் என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம்.

செயல்முறை:

என்னை தடுத்து வைத்திருக்கும் சங்கிலிகள், என்னுடைய மனதில் இருப்பவையாகும் என்பதை நான் புரிந்துகொள்வது அவசியம். எனக்கு என்ன நேர்ந்தாலும், அது என்னுடைய சொந்த தேர்வாகும் என்பதையும் நான் உணர்வது அவசியம். இவ்விதத்தில், எனக்கு நானே பொறுப்பேற்கும்போது, நான் குறைகூற கற்றுக் கொள்ளமாட்டேன், ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சிறப்பாக செய்வேன். அதன்பின்னரே, நான் உண்மையிலேயே சுதந்திரம் அடைகின்றேன்.