ரூ.75லட்சம் மதிப்பில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டப புனரமைப்பு மற்றும் நூலக கட்டுமான பணி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கவர்னகிரியில் ரூ.75லட்சம் மதிப்பில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டப புனரமைப்பு மற்றும் நூலக கட்டுமான பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபம் அமைந்துள்ளது. 2007ம் ஆண்டு ரூ.25லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த மணிமண்டபம் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கடந்த நிலையில் அதனை புனரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். செய்தித்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்த மணிமண்டபத்தின் புனரமைப்பு மற்றும் புதிய நூலக கட்டிடம், சுத்தமான குடிநீர் ஆகியவை அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.75லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து இன்று மணிமண்டப வளாகத்தில் புனரமைப்பு,நூலகம் அமைத்தில் ஆகியவற்றிக்கான கட்டுமான பணிகளை செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அறங்காவலர் குழு தலைவர் மோகன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டணர்.