காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு – தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்டுகள் நிறுத்தம்

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் 840 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனல்மின் நிலைய அதிகாரிகள் கூறுகையில், 4-வது யூனிட் ஆண்டு பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. 5-வது யூனிட்டுக்கு தேவையான உதிரி பாகம் ஒன்று வட இந்தியாவில் இருந்து வரவேண்டியுள்ளது. ஊரடங்கு காரணமாக அந்த பாகம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த உதிரி பாகத்தை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாளில் அந்த யூனிட் மீண்டும் செயல்பட தொடங்கும். மற்ற யூனிட்டுகள் மின் தேவை குறைவு காரணமாக அரசின் அறிவுறுத்தலின் பேரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. அரசு கேட்டு கொண்டால் உடனடியாக அந்த யூனிட்டுகள் மீண்டும் இயக்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.