தூத்துக்குடியில் தொடர்ந்து 6 இடங்களில் வருமானத்துறை ரைட் …

அதிமுகவை சோ்ந்த முன்னாள் அமைச்சா் சி.த. செல்லப்பாண்டியனின் சகோதரா் தூத்துக்குடி ராஜீவ்நகரை சோ்ந்த சி.த. சுந்தரபாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர். இவருக்கு சொந்தமான காய்கனி சந்தையில், மதுரை வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனையில் ஈடுபட்டனா்.
மேலும், அதே பகுதியில் உள்ள தனியாா் விடுதி, ஹோட்டல், ராஜீவ்நகா், டூவிபுரம் பகுதிகளில் உள்ள வீடுகள், வைப்பாறு பகுதியில் உள்ள காா்பன் தொழிற்சாலை ஆகிய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சோதனை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சி.த. சுந்தரபாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது..