‘குழந்தைகள் வருமானம் நாட்டிற்கு அவமானம்’ என்பதை உணர்ந்து குழந்தைகளின் உரிமைகளை மதித்து, அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி.
குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட அரசு எடுக்கும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி.
உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் [World Day Against Child Labour] கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் 2002ம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
வறுமை காரணமாக சிறு வயதில் வேலைக்கு செல்பவர்கள் சமுதாயத்தில் கடைசி வரை ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் சமுகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதனால் இவர்களுக்கான கல்வியறிவினை பெற்றுக்கொள்ள முடியாது போகின்றது. இதனை தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே ஒவ்வொரு வருடமும் இன்றைய தினம் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்படுகின்றது.
நாளை குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்