விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுத்தூண் திறப்பு : மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இசைமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுத்தூணை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள
இசைமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுத்தூணை தமிழ்நாடு முதலமைச்சர்,செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தலைமை செயலாளர்
சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர்.சங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

விளாத்திகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, இசைமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுத்தூணில்
அமைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.