தூத்துக்குடி மாவட்ட ஆட்சிய தலைவர் அவர்களின் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா நோய் தொற்று தடுப்பு ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையின் காரணமாக சிக்கியுள்ள வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் நோயாளிகள் வியாபாரிகள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நபர்கள் உடனடியாக தங்கள் விவரங்களை தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டங்களை சேர்ந்தோர் 0461 234001 என்ற தொலைபேசி எண்ணிலும், திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் ஏரல் வட்டங்களை சேர்ந்தவர்கள் 04639- 245165 என்ற எண்ணிலும், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் மற்றும் கயத்தாறு வட்டங்களை சேர்ந்தோர் 04632-220258 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 9384056221 என்ற அலைபேசி எண்ணிலும் அல்லது வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தியாக தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையின் காரணமாக சிக்கியுள்ள வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது விவரங்களை தங்களது வட்டத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ்அப் மூலமாகவோ உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் தெரிவித்துள்ளார்.