வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி

இந்தியாவில் வெங்காய விளைச்சல் தட்டுப்பாட்டால் கடுமையாக விலை உயர்ந்த நிலையில் முதற்கட்டமாக 11,000 டன் வெங்காயம் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதில் 30 டன் வெங்காயம் திருச்சிக்கு அனுப்பப்பட்டது. மேலும் எகிப்திலிருந்து 6,090 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்து கொள்ளும் வகையில் எம்எம்டிசி நிறுவனம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.