உப்பின் ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரி, முத்தையாபுரம், வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார் உள்பட 22 ஊர்களில் ஏறத்தாழ 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 80 சதவீதம் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட உப்பளங்களில் வழக்கமான உப்பு உற்பத்தி பணிகள் நடைபெற்று வந்தாலும் கரோனா எச்சரிக்கை காரணமாக கடந்த 5 நாட்களாக வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் உப்பு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதனால் ரூ.1 கோடி மதிப்பிலான உப்பு வர்த்தகம் பாதித்துள்ளது. இந்த தொழிலில் 400 சிறிய உற்பத்தியாளர்களும், ஏறத்தாழ 100 பெரிய உற்பத்தியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். உப்பளத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 60,000 தொழிலாளர்கள் இதை நம்பி இருக்கும் பட்சத்தில் இந்த இழப்பு அவர்களை வருத்துகிறது.