தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பால் படகு கட்டும் தொழில் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியை அடுத்துள்ள மீனவ கிராமம் தருவைகுளம் இந்த கிராமத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகிறார்கள் இவர்களின் பிரதான தொழில் மீன்பிடித் தொழில் இந்த மீனவர்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளை கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படைகளை பழுது நீக்கவும் புதிதாக படகுகள் செய்யவும் தருவைகுளம் கடற்கரை பகுதிகளில் படகு கட்டும் தளம் தனி நபர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு பழுதாகும் விசைப்படகுகளை பழுது நீக்கவும் அதுபோல புதிதாக படகுகள் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த பகுதியில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட படகு கட்டும் தொழிலாளர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் இந்த நிலையில் தருவை குளத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு படகுகள் நிறுத்தி தளமும் அமைக்கப்பட்டன இதனால் தருவைகுளம் கடல் பகுதியில் ஒரு பகுதி கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் கடற்கரையோரமாக உள்ள படகு கட்டும் தளத்திற்கும் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் புகுந்து வருகிறது இதனால் படகு கட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் படகை சீர்செய்யும் காலமும் அதிகமாவதால் விசைப்படகு உரிமையாளர்கள் தூத்துக்குடிக்கு சென்று பழுதை சரி செய்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதனால் போதிய வருவாய் இன்றி படகு கட்டும் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர் எனவே தங்களுக்கு மீன்வளத்துறை வேறு இடத்தை ஒதுக்கித் தர வேண்டுமென தெரிவித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர் ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கடல் அரிப்பு காரணமாக படகு கட்டும் தளத்திற்கு உள்ளாகவே கடல் நீர் புகுந்து விடுவதால் படகுகள் நிறுத்துவதற்கு வைக்கப்பட்ட பலகைகள் சேதமடைந்து இதனால் படகுகள் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே மாவட்ட நிர்வாகமும் மீன்வளத்துறையும் படகு கட்டும் தளம் அமைத்துக்கொள்ள ஒரு இடத்தை தேர்வு செய்து தங்களுக்குத் தர வேண்டுமென படகு கட்டும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கடல் அரிப்பால் தத்தளிக்கும் படகு கட்டும் தொழிலை பாதுகாக்க மீன்வளத் துறையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தருவைக்குளம் மீனவர்கள் மற்றும் படகு கட்டும் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது