பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால், 21 நாள்களில் தூக்கு – ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் உருவாக்கப்படவுள்ளது.  இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், ஒரே வாரத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்படும். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் குற்றவாளி தூக்கிலிடப்படுவார். மொத்தத்தில் குற்றவாளிகளுக்கு 21 நாள்களுக்குள் தூக்குத்தண்டனை வழங்கும் வகையில், ஆந்திர சட்டமன்றத்தில் நாளை மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது என தெரிவித்தார்.