சமூக பரவல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில் தான் உள்ளது – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் ரூ.2.77 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி திறந்து வைத்தார்.

புதிய அலுவலகக் கட்டிடத்தில் இன்று நடந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 24 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் 8 பேருக்கும், மகளிர் திட்டம் சார்பில் 17 பேருக்கும் என 49 பயனாளிகளுக்கு ரூ.29.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள் மற்றும் அம்மா இருசக்கர வாகனம் ஆகியவற்றை வழங்கினார்.

தொடர்ந்து, கயத்தாறு அருகே திருமலாபுரம் விலக்கில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சத்தில் கட்டப்பட உள்ள பயணிகள் நிழற்குடைக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்
“நடிகர் கமலஹாசன் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக செல்வார்.ஊரடங்கு நேத்தில் கருத்துக்கள் யாரூம் சொல்லுவதில் தவறு இல்லை.

நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும், தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும், வீட்டில் இருக்க வேண்டும், விலகி இருக்க வேண்டும் என்று தான் உலக சுகாதார நிறுவனம், மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மக்களுக்கு கூறி வருகின்றனர்.

இதை தான் நடிகர் கமலஹாசனும் கூறியுள்ளார். அனைவரும் சொல்ல வேண்டிய கடமையில் இருக்கின்றனர். சமூக பரவல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில் தான் உள்ளது.

அரசு ஊரடங்கினை அமுல்படுத்தலாம், அத்தியாவசிய அவசியம் கருதி சில தளர்வுகளை தரலாம்.தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே வர வேண்டும், முககவசம் அணிய வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மக்களிடம் உரையாற்றி கொரோனா விழிப்புணர்வு குறித்து அறிவுறுத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாநிலம் மற்றும் சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு தான் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தவிர தூத்துக்குடி மாவட்ட மக்கள் யாரூக்கும் இல்லை. தூத்துக்குடி துறைமுகத்திற்கு இலங்கை, மாலத்தீவில் இருந்து 2 கப்பல்கள் மூலமாக வந்தவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு, அவர்களுகளுடைய சொந்த ஊர்களுக்கு பாத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் 2 பேருக்கு மட்டும் தொற்று கண்டறியபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வரும் 21ந்தேதி ஈரான் நாட்டில் இருந்து தமிழகத்தினை சேர்;ந்த 700க்கும் மேற்பட்ட மீனவர்களை ஏற்றி கொண்டு ஒரு கப்பல் வருகிறது. மற்ற 2 கப்பல்களில் வந்தவர்களுக்கு என்ன நடைமுறை பின்பற்றபட்டதோ, அதே முறையில் இவர்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார்.

விழாவில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார், கோவில்பட்டி டி.எஸ்.பி.கலைகதிரவன் மற்றும் அலுவலர்கள், அதிமுக கயத்தார் ஒன்றிய செயலாளர் வினோபாஜி உள்ளிட்ட கலந்து கொண்டனர்.