காங்கிரஸ் தனியாக நின்றால் நாம் தமிழர் பெற்ற ஓட்டுக்களை கூட வாங்க முடியாது சீமான் சவால்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் பொங்கல் விடுமுறையில் பரோலில் வந்து தனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் அவரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் 7 தமிழரின் விடுதலை கருணை மனு மீதான ஆளுநரின் செயல்பாடுகள் வேண்டுமென்றே திட்டமிட்டு காலம் தாழ்த்தப்படுவது போல் இருக்கிறது வருங்காலங்களில் திராவிட மற்றும் தேசிய கட்சிகளுடன் நாம் தமிழர் எப்போதும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறியுள்ளார்.

புதிதாக வருபவர்கள் தங்களுடன் இணைந்து பயணிக்க விரும்பினால் கூட்டணி அமைக்கப்படும் என சீமான் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியை தனித்து நின்றால் நாம் தமிழர் பெற்ற ஓட்டுக்களை கூட வாங்க முடியாது என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

-seithikkural