குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் – தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர் அந்தோனி சாமி (44) மற்றும் அவரது மனைவி மலர்விழி (30) இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆத்திரமடைந்த அந்தோனிசாமி, மலர்விழியை கத்தியால் குத்தியுள்ளார். காயமடைந்த மலர்விழி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடபாகம் போலீசார் அந்தோனிசாமி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.