மனைவியை ஏமாற்றிய கணவர் கொலை – மதுரை

மதுரை மாவட்டம் சீட்டாலாட்சி நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் தனது மனைவி சுபாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். சுபாவை பிரிந்த பிறகு வேறொரு பெண்ணுடன் தொடர் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சுபா, தனது ஆண் நண்பர்கள் உதவியால் ரஞ்சித்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ரஞ்சித் வீட்டுக்குள் சென்று சுபா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டியதோடு அவரது ஆண் உறுப்பையும் வெட்டி வீசியுள்ளனர். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சித் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சுபா மற்றும் அவருக்கு உதவிய ஆண் நண்பர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *