ஊரடங்கினை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? – ஆட்சியர் பேட்டி

கொரானா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கினை வரும் மே 17ம் தேதி வரை நீடித்துள்ளது. ஆனால் கொரானா கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதனை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதைப் பற்றி ஆட்சியர் செய்தியாளர்களிடம் விளக்கினார். 

அப்போது அவர் கூறுகையில் : தூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே எந்தவகையான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் திறக்கலாம் ஒரு அறிக்கை வெளிடப்பட்டுள்ளது. அவைகள்,

  • மாநகராட்சிக்கு வெளிப்பகுதி மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், ஸ்பின்னிங் மில்கள் ஆகியவை 50% பணியாளர்களை கொண்டு இயங்கலாம். 
  • ஐ.டி.நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கலாம்.
  • நகர் மற்றும் ஊரக பகுதிகளில் கட்டுமானப்பணிகள் சுழற்சி முறையில் நடைபெற அனுமதி.
  • அரசுத்துறை சம்பந்தமான அனைத்து கட்டிட பணிகளும்  நடைபெற அனுமதி.
  • எலெக்ட்ரீசியன், பிளம்பர், வீட்டு வேலை செய்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் அரசு வழங்கும் பாஸ் பெற்றுக்கொண்டு அவர்கள் பணிகளில் ஈடுபடலாம்.
  • கட்டுமான பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை திறக்கலாம். அவர்களுக்கு சரக்கு கொண்டு வரும் லாரிகளுக்கும் அனுமதியளிக்கப்படும்.
  • தனியாக இருக்கும் கடைகளான, மொபைல், மற்றும் வீடுகளுக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கலாம்.
  • பிரிண்டிங் பிரஸ் கடைகளுக்கு அனுமதி.

அரசு அறிவித்துள்ள தளர்வுகளை பயன்படுத்தி மக்கள் சமூக இடைவெளியுடன் செயல்படுமாறும் மேலும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.