கொரோனா தொற்று பற்றிய தகவல் – ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்று காரணமாக 24பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று வரை 22 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் இன்று தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரதுறை செயலாளர் ஆகியோர் நமது மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தாெற்று இருப்பதை உறுதி செய்துள்ளனர். எனவே 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

இதுவரை கொரோனா தொற்று காரணமாக போல்டன்புரத்தை சேர்ந்த அந்தோணியம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்து உள்ளார். மேலும் இன்று சிறுவன் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் என 79 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர், இவர்களின் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் இருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.