தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் – தமிழக அரசு

தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகளின் இயக்க நேரம் குறித்து மாநில அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் ஆகியவை 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.