முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம்

பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. அரசியல் தலைவர்கள் பலருக்கும் அவ்வவ்போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த வரிசையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் எம்பியுமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்..