நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மருந்து: தூத்துக்குடி

தூத்துக்குடி (பொிய) காய்கறி மாா்க்கெட்டில் இன்று காலையில் தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகமும் & தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலும் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா நோயை தடுக்க நோய் தடுப்பு மற்றும் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்க ஹோமியோபதி ஆா்செனிக்கம் ஆல்பம் 30C மாத்திரைகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

ஆா்செனிக்கம் ஆல்பம் 30C உட்கொள்ளும் முறைகள் :

1.) 4 உருண்டைகள் (30size) அல்லது 1 உருண்டை (60size) தினசரி காலை வெறும் வயிற்றில் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளவும்.
2.) நாக்கில் வைத்து சுவைத்து சாப்பிடவும்.
3.) அனைத்து வயதினர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் இதர நோய்களுக்கு வேறு மருத்துவதுறை மருந்துகள் எடுத்து கொண்டிருந்தால் சாப்பிடலாம்.
4.) மருந்துகளை கையில் தொடாமல் உபயோகிக்கவும்.
5.) ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் இதே மருந்தை உபயோகிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அரசு மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவர்கள் மற்றும் மருந்து கடைகளை நாடாவும்.